உயிலங்குளம்,நொச்சிக்குளம் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைப்பு!

உயிலங்குளம் மாந்தை தெற்கு பிரதேச அபிவிருத்திக்குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க

உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழன் கலவன் பாடசாலைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு 03 ஆம் தவணை பரீட்சையில் ஆண்டு 01 முதல் 11 வரையான வகுப்புக்களில் முதல் மூன்று இடங்களை பெற்ற 39 மாணவர்களுக்கும், நொச்சிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்டு 01 முதல் 05 வரையான வகுப்புக்களில் முதல் 03 இடங்களைப் பெற்ற 26 மாணவர்களுக்குமாக மொத்தம் 65 மாணவர்களை பாராட்டியும், அவர்களது கல்வியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்வதற்கும், அதே போல ஏனைய மாணவர்களுக்கும் இதனூடாக ஓர் ஊக்கத்தை கொடுக்கவேண்டும் என்ற நோக்கோடும், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து 195 பாடசாலை அப்பியாசக்கொப்பிகளை 09-01-2017 வெள்ளி காலை 11:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து மாந்தை தெற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் மடுத்தீன் வின்சென்ட் அவர்களிடம் வழங்கிவைத்தார்.