கலைக்க துணிந்தவர்கள் தான் கன்னியானதும்.!

கரு பெண்ணென்று
கண்டறிந்ததும்
கள்ளிப்பால் கலந்து
கலைக்க துணிந்தவர்கள் தான்
கன்னியானதும்
காமத்திற்காக அலைகிறார்கள்!

பருவம் அடைந்ததும்
பாலியத்திற்காக படையெடுத்து
திரிகிறார்கள்!
கடிப்பதற்காகவும் …….
களைவதற்காகவும்……
புசிப்பதற்காகவும்……
புணர்வதற்காகவும்……

தம் களை தீர்ப்பதற்காகவும்…..
தன் கலை வீர்வதற்காகவும் …..
தம் தலைமுறை வாழ்வதற்காகவும்……
விதை நிலமாக படுத்துகிறார்கள்!

பெண்ணிலையை கண்டறிவதாக
நினைக்கும் வேடன்கள்
தொடைகளுக்கிடையில்
புதிரொன்று இருப்பதாக
விடை தேடி அலையவும்….
வேட்டையாடி புசிக்கவும்…..

விளைகிறார்கள்!
மங்கை பெறும் வலியினை
மதித்திடாமல்
சுகங்களை சுமக்கும்
இயந்திரமாக கருதுகிறார்கள்!

பண்பாடு காப்பாற்றும்
பாரினில் பெண்பாடு இப்படியானது ஏனோ!
பொறுத்தது போதும்
பொங்கியெழும் நேரம் இது!

உயிரை படைத்த உத்தமிகள்
படுபாவிகளை பதம்பார்க்கும் பருவம் இது!
மானபங்கம் செய்ய நினைப்பவர்களுக்கு
மரண வாயிலை காட்டும் காலம் இது!

தோழி கவிதாயினி