ஆம் நான் அகங்காரம் பிடித்தவள் தான் ஆளுமை செய்வதனால்!

ஆம் நான் சண்டைக்காரி தான்
ஏனென்றால் முதுகுக்கு பின்னால்
பேசத் தெரியாமல் முகத்திற்கு முன்னால்
பேசுவதனால்…..

ஆம் நான் அகங்காரம் பிடித்தவள் தான்
ஏனென்றால் அதிகாரம் செய்பவரைக் கூட
ஆளுமை செய்வதனால்…..

ஆம் நான் கோபக்காரி தான்
ஏனென்றால் தவறுகளைக் கண்டு
சகித்துக் கொள்ளாமல் பொங்கி எழுவதனால்…..

ஆம் நான் வாயாடி தான்
ஏனென்றால் பேதம் பார்க்காமல்
வாதம் செய்வதனால்….

ஆம் நான் ராங்கிகாரி தான்
ஏனென்றால் கடினமான தருணங்களில் கூட
சோர்ந்து போகாமல்
எதிர்த்துப் போராடுவதனால்……

ஆம் நான் கண்டிப்புக்காரி தான்
ஏனென்றால் வரம்பு மீறுபவர்களிடம் – என்
வலிமையை காட்டுவதனால்……

ஆம் நான் முசுடு தான்
ஏனென்றால் முரண்டு பிடிப்பவர்களிடமே
முரட்டுதனமாக நடப்பதனால்….

ஆம் நான் பிடிவாதக்காரி தான்
வெறுப்பின் வலியையும்
சோதனையின் ரணங்களையும்
தனியாக தாங்கிக் கொள்வதனால்…..

ஆம் நான் திமிர்காரி தான்
ஏனென்றால் உண்மை சுடும்
என்பதை உணர்ந்து(த்தி) நடப்பதனால்…..

ஆளும் கட்சி யாரெனில்
எனக்கென்ன?
குறுகிக் கிடக்கும் குறில்
நானில்லை !

தோழி கவிதாயினி