என்னோடு நீ இருந்தால்..!

கண்ணாளா
இத்தனை வருட பிரிவு
பாதிக்கவில்லையடா-உன்
இரு விழி பார்வையை
மீண்டும் பார்க்கும் வரை!

பார்வையால் வசியம் செய்யும்
வித்தையை எங்கு கற்றாய்?-உன்
காந்த கண் பார்வையால்
இரும்பாலான -என்
இதயமே ஈர்த்துவிட்டதே!

என்னை சுற்றி இரும்புச் சுவர்
கட்டிவிட்டேன் என்று
இறுமாந்து கொண்டிருந்தேன்!வெறும்
பனிச் சுவர் தானடி
பைத்தியகாரி என்று
பகுத்தறிவிற்கு எட்டும் படி
செய்யது விட்டாய்!

உன் பார்வைக்கே நான்
உருகி விட்டேன்!
வார்த்தைகள் வரமுன்
மெளன போராட்டம் சிறந்ததே!

ஒரு மணி நேரம் ஓராயிரம்
யுகமாய் தோன்றுகிறதே!
இத்தனை கால பிரிவும்
இம்மியளவாய் தெரிகிறதே!
இனி வருங்காலம் பற்றி
எனக்கு கவலை இல்லை!
என்னோடு நீ இருந்தால்!

தோழி கவிதாயினி