வெட்கித் தலை குனிந்த காலம் காணும்..!

அடுப்படி அடுப்படியென
அடைந்திருக்கும் மாதரே
அடிமைகளாய் அடிபட்டு அடைபட்ட
வாழ்ந்த வாழ்க்கை போதும்!

அரிசியில் கல்லைத் தேடும் நீங்கள்
அரசியலை ஏன் கொஞ்சம்
அலசிப் பார்க்கக்கூடாது!
மேற்கத்திய பெண்களின்
சாதனைகள் கூட சோதனைகளை
தாண்டியது தான் !

வெட்கித் தலை குனிந்த
காலம் காணும்!
வெளியுலகைக் கொஞ்சம்
எட்டிப் பாருங்கள் !

தடைகளை தகர்த்தெறிந்து
தகவுகளை தேடிக் கொள்ளுங்கள்!
அடுத்த வெற்றி நிச்சயம்
உங்களுடையதாகத் தான் இருக்கும் !
அதற்காக உங்களிடமிருக்கும்
பெண்மையையும் பண்பினையும்
விட்டுவிடச் சொல்லவில்லை!

பயத்தையும் அறியாமையையும்
ஏமாறும் தன்மையையும் தான்
நீக்கிவிட கேட்கிறேன்!

இன்றுடனாவது புலம்பித்திரிவதை
நிறுத்திவிட்டு பாரதி கண்ட
புதுமை பெண்கள் என்பதை நிரூபியுங்கள்!

தோழி கவிதாயினி