சிங்கம், புலி வரும்போது ஒரு பயந்தாங்கோழி வரக்கூடாதா?

சிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என

படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14முதல் துவங்கவுள்ளது. இப்படத்தை கோலிசோடாவில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார். இசை பாபு நாத் மற்றும் லிஜோ. ஒளிப்பதிவு எஸ்.கண்ணன். இவர் இந்தியில் நட்டியுடன் பல படங்களில் பணியாற்றியவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்​.​

சதுரங்க வேட்டை படத்தில் அஷோஸியேட் எடிட்டராக பணியாற்றிய திலீப் எடிட்டிங்கை கவனிக்கிறார். நாயகனாக கோலி சோடா, பசங்க படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய கிஷோர் நடிக்கிறார். இவருடன் பல முண்ணனி நடிகர்கள் நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் நான், சாருலதா போன்ற படங்களை விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பி.எஸ்.டி நிறுவனம், மைல்ஸ்டோன் நிறுவனம், எம் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளன.