ஜோ ரூட்டிற்கு ஆண் குழந்தை!

ஜோ ரூட்டிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அவர் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா புறப்பட இருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த நாடு புறப்பட்டது.

பின்னர் மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக கடந்த ஐந்தாம் தேதி இங்கிலாந்து அணி இந்தியா புறப்பட்டது. அந்த அணியுடன் முன்னணி வீரரான ஜோ ரூட் புறப்படவில்லை. அவரது மனைவி கேரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதனால் அவர் இங்கிலாந்து அணியுடன் இந்தியா புறப்படவில்லை. ஆகவே முதல் ஒருநாள் போட்டியில் அவர் கலந்து கொள்வாரா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (7-ந்தேதி) கேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆல்பிரெட் வில்லியம் என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்துள்ளதால் வருகிற புதன்கிழமை (11-ந்தேதி) இங்கிலாந்தில் இருந்து புறப்படுவார் என்று கூறப்படுகிறது.