குத்துச்சண்டையில் தேசிய சாம்பியன் ஆக உருவெடுத்துள்ள எட்டு வயது சிறுவன்!

காஷ்மீரைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்,

குத்துச்சண்டையில் தேசிய சாம்பியன் ஆக உருவெடுத்துள்ளான்.

ஜம்மு காஷ்மீர் மாநலிம் ரஜோரியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான அப்பு அமாஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் தேசிய அளவில் நடத்தப்பட்ட தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளான். இதன்மூலம், இளம் வயதில் தேசிய பாக்சிங் சாம்பியன் ஆகியிருக்கிறான்.

அவனது சாதனையை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி காவல்துறையும் பாராட்டியுள்ளது. இந்த இளம் குத்துச்சண்டை வீரனின் சாதனையை உள்ளூர் மக்களும் பாராட்டினர்.

சிறுவனின் சாதனை குறித்து அவனது தந்தை அப்பாஸ் சதக்கி கூறும்போது, ‘‘அவன் (அப்பு அமாஸ்) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதற்காக அவன் சரியான திசையில் பயணித்து இந்தியாவின் பெயருக்கு பெருமை சேர்க்க இறைவன் அருள் செய்ய வேண்டும்’’ என்றார்.