மத்திய அரசு பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் மறுபடி சேர்ப்பு!

இந்தியாவில் பொங்கல் விடுமுறையை விருப்பப் பட்டியலில் இருந்து கட்டாய விடுமுறைப் பட்டியலில்

மத்திய அரசு சேர்த்துள்ளது. தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பினையடுத்து இந்திய மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நேற்று மாலை இந்திய மத்திய அரசு பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்ததனைத் தொடர்ந்து தமிழகத்தில பலமான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் இந்திய பிரதமர் மோடிக்கு இதுதொடர்பான கடிதத்தை இன்று காலை அனுப்பி இருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் 28ம் திகதி கொண்டாடப்படும் தசரா பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பொங்கல் பண்டிகை வைக்கப்பட்டுள்ளது.