கடல் போன்ற கனவு மரணநொடிகளிலும்.!

அடர் இருளில்
வசந்தம்
வந்து கடக்கையில்
காலங்கள் அளித்த
பிரம்ம ரகசியங்கள்
ஒற்றை முடிச்சிலிர்ப்பில்
சிதறி விழுகின்றன..

மூச்சுத்திணற
மின்னல் பாய
சிறகிழந்து போயின
என் ஆசைகள் …

நிராசையாய்
கடக்கவியலா
கடல் போன்ற
கனவு
கரைந்து போனது …

இருள் நிறைந்த
நொடிகள் ஆனாலும்http://www.tamilarul.net/wp-admin/post-new.php#edit_timestamp
மரணநொடிகளிலும்
துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயம் …

கலா புவன்
10.01.2017