நாளைதிரு”ஆருத்ரா “தரிசனம்-ஜெ.மயூரசர்மா (M.A)!

இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள்தான் “திரு”என்று ஆரம்பிக்கும் அவை திருவாதிரை,திருவோணம்.முன்னது சிவனுக்கு உரியது மற்றொன்று விஷ்ணுக்கு உரியது.

தட்சாயண காலத்தின் இறுதி மாதமாகிய மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரதன்று வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி அற்புதமான முத்தியரையுடன் எம்பெருமான் சிவன் காட்சியளிக்கும் தரிசனமே ஆருத்ரா தரிசனமாகும்.

ஆருத்ரா என்பது ஆதிரை ஆகும் அந்த திரு வாகிய சிவனின் தரிசனம் ஆருதரா தரிசனம்.

“திருவாதிரையில் ஒரு வாய் களி”என்பது பழமொழி விறகு வெட்டியாகிய சேந்தனின் பக்தியை மெச்சி,சிவனடியார் வேடத்தில் அவன் வீட்டில் களி தின்னதோடு மட்டுமல்லாமல்,மறு வேலைக்கு வாங்கி கொண்டார் சிவன்.

தில்லை கோயிலை திறந்த பணியாளர்கள் நடராஜரின் அருகில் களி கொட்டி கிடந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு அரசரிடம் கூறுகிறார்கள்,

சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அரசர் அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது.

அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.

சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும்,

இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது. திருவாதிரை நாளில் விரதம் இருந்து களி சாப்பட்டால் அளப்பறிய பலன் கிடைக்கும்.

நாளை 11-01-2017 புதன்கிழமை ஆருத்ரா தரிசனமாகும் அன்று விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்யுங்கள் உங்கள் பாவமெல்லாம் விலகி அளப்பரிய சந்தோசங்கள் கிட்டும்.

ஜெ.மயூரசர்மா (M.A)