புதிய அரசியல் அமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு – கூத்தமைப்பு!

புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தமிழ் தேசிய

கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இரண்டு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரா.சம்பந்தனின் தலைமையில், அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட இணங்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவுகின்ற போதும், மாற்றுவழிகள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் இந்த பணிகளுக்கு ஒத்துழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் சமஷ்ட்டி மற்றும் ஒற்றையாட்சி போன்ற விடயங்களைக் கடந்து, அதிகாரப் பகிர்வு என்ற விடயத்திலேயே அவதானம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.