தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கா?- ஜி.வி. பிரகாஷ் ஆவேசம்!

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கா,

இல்லையா என நடிகர் ஜி.வி. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. அதாவது பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை குறித்து அறிந்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா, இல்லையா? என கேள்வி ?