சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? முதல்வர் கனடாவில் விளக்கம்!

இன்றைய எமது அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சுதந்திரமாகவும்

சுய கௌரவத்துடனும் தமது தனிப்பட்ட அடையாளங்கள் முறைகள் ஆகியவற்றைப் பேணி அவற்றின் பால் ஒழுகுவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஏனைய இனங்களின் அடக்கு முறைகளோ அதிகாரப் பிரயோகங்களோ எம்மைப் பாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம். சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி .வி.விக்னேஸ்வரன் கனடாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் எடுத்துக்கூறினார்கள்.

இன்று நடைபெற்று முடிந்த ஊடகவியலாளர் மகாநாடு மற்றும் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இன்று நடைபெற்றுமுடிந்த இந்த விழாவில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன் என்கிறார்கள். மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ‘தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்றான் பாரதிதாசன் போல விக்னேஸ்வரனும் உறுதிபட தமிழ் மொழியினையும், தமிழர்களின் அடையாளத்தினையும் பாதுகாக்க சகல மக்களும் ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும் என்கிறார்கள்.

தமக்கே உரிய கலை பண்பாட்டு இலக்கிய விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதிலும் மரபுவழி பண்பாட்டு இலக்கியங்களின் இலக்கண புருஷர்களாக வாழ முனைவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் தமிழர்கள். எமது இனம் இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் தமது பாரம்பரிய பண்பாட்டு சுவடுகளை விட்டுவிடாது அதன்வழி நடக்கமுனைந்துள்ளது.

ஏனைய சமூகங்கள் எம்மைஅடக்க முற்படும் போது வீறுகொண்டு எழுகின்ற தமிழினமாக மாறவும் அவர்கள் பின்னின்றதில்லை எனவும் பெருமைப்பட கூறினார்கள்.

தோல்விகள் தரையில் அல்ல. எமது மனத்தில்த்தான் தோன்றுகின்றன. மனதைப் பண்பட்டதாக மாற்ற எமது பண்பாடுகள் பாரம்பரியம் வரலாறு பற்றிய அறிவு மிக முக்கியம். அதே நேரத்தில் ஒற்றுமையின் அத்தியாவசியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை இன்றேல் அனைவருக்குந் தாழ்வே’ என்கின்றது எமது பண்பாடும் இலக்கியமும். எம்மிடையே காணப்படக்கூடிய மத இனஇவர்க்க வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் தமிழ் மொழியால் ஒன்றுபட்டு தமிழர்கள் என கூறிக்கொள்வதில் பெருமையடையும் காலம் வெகு தொலைவிலில்லை.நாம் மதத்தினால் வேறுபட்டாலும் மொழியினால் ஒன்றுபட்டவர்களாகவே இருக்கின்றோம். அழிந்து வரும் எம்மக்களின் அனுபவ அறிவை நாங்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்க சகல தமிழ் மக்களும் ஒன்றிணைகின்ற காலம் என்கிறார்கள்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் சுற்றுலா வருபவர்கள் எமது பாரம்பரியங்களிலும் பண்பாட்டிலும் நாட்டம் கொண்டே இங்கு வருகின்றார்கள். தம்மை விட வேற்று பாரம்பரியங்களைக் கொண்ட மக்களையும் அவர்களின் கலாசாரங்களையும் அறியவும் அவதானிக்கவுமே வருகின்றார்கள். எனவே எமது பாரம்பரியங்களைப் பாதுகாப்பது பொருளாதார விருத்திக்கும் அடி கோலுகின்றது. ஆனால் எங்களின் பாரம்பரிய பொக்கிஷங்களை பாதுகாக்க எங்களிடம் போதுமான அதிகாரங்கள் இல்லை என்றார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் இன்றைய எமது அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சுதந்திரமாகவும் சுய கௌரவத்துடனும் தமது தனிப்பட்ட அடையாளங்கள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பேணி அவற்றின் பால் ஒழுகுவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏனைய இனங்களின் அடக்கு முறைகளோ அதிகாரப் பிரயோகங்களோ எம்மைப் பாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும் இந்த மண்ணில் சகல இனங்களும் வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் யாப்பு திருத்தங்களுக்கான முன்னெடுப்புக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலப் பொழுதில் எமது வாழ்வியல் உறுதிப்பாடுகளையும் அடையாளங்களையும் மற்றும் இன்னோரன்ன பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து அவற்றை எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லக் கூடிய வழி வகைகளையும் நாம் ஆராய வேண்டும். எம்மிடையே சிறந்த இசை ஞானம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்களின் இசைத்தேடல்களை மேல் நிலைக்கு கொண்டுவருவதற்கு ஏற்ற பயிற்றுவிப்பு பாடசாலைகள் இசைக்கல்லூரிகள் எம்மிடம் இல்லை. சிறந்த ஓவியக் கலைஞர்கள்இ நடனக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் துறைகளில் முன்னேறுவதற்குநாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எமது மாணவ மாணவியருக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்குவதன் மூலமே அவர்களைச் சிறந்த கலைஞர்களாக மாற்ற முடியும்.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை மிகவும் அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மீண்டும் இன்று கனடாவில்வ
வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சி முறைமையையே தாயக மக்களும் புலம்பெயர்ந்துவாழும் மக்களும் விரும்புகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை அவசியம் என வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த யோசனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றய ஊடகவியலார்கள் மகாநாட்டில் தெரிவித்துள்ளார். கல்வி சம்பந்தமாக வினவப்படடபோது தங்களுடைய அரசாங்கம் தாராளா மனதுடன் உதவி வழங்க இருப்பதாக கூறினார்கள்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தாம் இதனைக் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தாமாகவே முன்வந்து எதனையும் செய்வதில்லை எனவும், தமிழ் மக்கள் அழுத்தங்களை பிரயோகித்தால் மட்டும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச அழுத்தங்கள் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

படையினர் காணிகளை வழங்கியுள்ள போதிலும் செழிப்பான காணிகளை தொடர்ந்தும் தம் வசம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினர் பாரியளவில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் ஒன்றும் செய்யப்பவதில்லை எனவும் கூறினார்கள்.

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். அந்த வகையில் உருவாக்கப்படும் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்திற்கு தமிழீழ மாநில அரசு என பெயர் வைக்கப்படல் வேண்டும் என மேலும் தெரிவித்தார்கள். மாநில அரசுக்கு காணி பொலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். அரச நிர்வாக மொழியாக சிங்களம், தமிழ் இரண்டும் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படல் வேண்டும், அரசியல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரையறுக்கப்படல் வேண்டும், பன்மைத்துவ சமூங்கங்கள் வாழ்கின்ற இலங்கையில் அனைத்து சமூங்களுக்கும் உரிமைகள் நலன்கள் மதங்கள் பாதுகாக்கின்ற விடயங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும், மலையக மக்கள், முஸ்லிம் மக்களும் சம அந்தஸ்துடன் வாழ கூடிய வகையில் ஏற்பாடுகள் கொண்டுவரப்படல் வேண்டும்,எனவும் தெரிவித்ததோடு, சமஸ்டி என்பது பிரிவினை வாதம் அல்ல எனவும், கனடாவில் உள்ளது போன்று மாநில அரசு போன்ற முறைமைக்கு அமைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தயக்கமின்றி தங்களுடைய கருத்துககைள முன் வைக்க வேண்டும் எனவும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் மேற்கொள்ளகின்ற குழுவிடம் வழங்;கப்படும் எனவும் குறிப்பிட்டார். சமஸ்டி முறைமை என்பது பலம் வாய்ந்த தேசிய அரசாங்கத்திற்கும் சிறிய உள்ளுர் அரசாங்கங்களுக்கும் இடையில் அதிகாரத்தைப் பகிர்கின்றது. ஒரு நாட்டில் பல இன மக்கள் வாழும் போதும் அவர்கள் தமது வாழிடங்களை வரையறுத்துக் கொள்ளும் போதும், சிறுபான்மை மக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த ஆட்சி முறைமையாக சமஸ்டி ஆட்சி விளங்குகிறது. சமஸ்டி நிர்வாக முறைமையானது சிறப்பாக இடம்பெறும் நாடுகளில் கனடா முதன்மை பெறுகிறது. பிரென்ஞ் மொழியைப் பேசும் சிறுபான்மை மக்கள் வாழும் கனடாவின் கியூபெக் மாநிலமானது ஆங்கில மொழி பேசும் கனடாவின் ஏனைய மாநிலங்களிலிருந்து சமஸ்டி நிர்வாகத்தின் கீழ் பிரிவதற்கு மறுத்தது. அதாவது இவர்கள் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் தமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செழுமைக்காகவும் பணியாற்ற வேண்டும் என ஒன்றுசேர்ந்து செயற்படுகின்றனர். எழுகதமிழ் பேரணியில் நான் உரையாற்றும் போது, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பயந்தே வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தாது அச்சத்துடன் வாழ்ந்தனர் என நான் தெரிவித்திருந்தேன்.