டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் அமீரக வீரர்களுக்கு அனுமதி இல்லை!

டெல்லியில் 2016ம் ஆண்டு நடந்த குடியரசு தின

விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அதனை கவுரவிக்கும் வகையில், குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவ இசைக்குழு கலந்து கொண்டது. அதே போன்ற நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு தலைமை விருந்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் சேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் பங்கேற்க உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் தனது ராணுவத்தின் பாராசூட் வீரர்களின் சாகச நிகழ்ச்சியை அணிவகுப்பில் நடத்த விருப்பம் தெரிவித்தது. ஆனால் பாதுகாப்பு காரணத்தினால் பாதுகாப்பு அமைச்சகம் அமீரகத்தின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள்.அமீரகத்தின் ராணுவ இசைக்குழு பங்கேற்கும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.