மொரகஹகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் பாய்ச்சும் நிகழ்வை ஆரம்பித்தஜனாதிபதி!

மொரகஹகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் பாய்ச்சும் நிகழ்வை ஜனாதிபதி சற்றுமுன்னர் ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது 2007 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

இத்­திட்­டத்தை மேற்­கொண்­டதன் அடிப்­ப­டையில் மேலும் சில வரப்­பி­ர­சா­தங்­களும் குறித்த பிர­தே­சங்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது.

மொர­கஹ­கந்த­யி­லி­ருந்து புருல்வெவ வரை­யி­லாக இருக்கும் ஆறு­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­காக 65 ஆயிரம் மில்­லியன் ரூபா செலவில் 102 கிலோ­மீற்றர் வரையில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. குறித்த மொர­கஹ­கந்த நீர்த்­தேக்க திட்­ட­த்தில் மொர­கஹ­கந்த – களு­கங்­கைக்­கி­டை­யி­லான திட்டம், மொர­கஹ­கந்த­யி­லி­ருந்து மாகந்தை வரையில் ஆறு­களை அபி­வி­ருத்தி செய்யும் திட்டம் மற்றும் தம்­புலு ஓயா­வி­லி­ருந்து மீ ஓயா­வுக்­கி­டை­யி­லான அபி­வி­ருத்தி திட்டம் ஆகி­யன மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அந்­த­வ­கையில் குறித்த மொரக­ஹ­கந்த முழுத்­திட்­டத்­துக்கும் அர­சாங்­கத்­தினால் 1150 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­ப­ட­வுள்­ளது.

கடந்த காலங்­களில் விவ­சா­யத்­திற்கு தேவை­யான நீர் இன்றி பாரிய சவாலை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். அவர்­க­ளுக்­கான நீரை பெற்­றுக்­கொ­டுத்து பாரி­ய­ளவில் விவ­சா­யத்­து­றையை மேம்­ப­டுத்தும் அதே­வேளை அங்கு 25 மெகா வோட் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­ய­வுமே மிகப்­பா­ரி­ய­ள­வான நிதியின் மூலம் இத்­திட்டம் மேற்­கொள்­ளப்­ட்டு வரு­கின்­றது.