திருகோணமலையில் சத்தியாகிரகம்..!

கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் சித்திரவதையும்

படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலையில் சத்தியாகிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் மேற்படி சத்தியாகிரகப் போராட்ட த்தை ஒழுங்கு செய்துள்ளது.

இதில் மதகுருமார்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.