வந்தாறுமூலை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் தொலைக் காட்சியில் சனல் மாற்றிய சம்பவத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணன் தங்கை இருவருக்கும் இடம்பெற்ற வாக்குவாதப் பிரச்சினையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

தற்கொலை செய்து கொண்டவர் விஸ்வலிங்கம் குணாளன் (வயது 18) என்ற இளைஞர் எனவும் நேற்று இரவு சுமார் 08.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.உயிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.