’துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து ’பகடி ஆட்டம்’ ஆட வரும் ரகுமான்!

ரகுமான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்

’துருவங்கள் பதினாறு’. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரகுமான். ’துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ என்ற ஒரு படம் வளர்ந்து வருகிறது. இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிரார். தற்போதுள்ள சூழ்நிலையில் சமூகவலைதளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுகு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக்கு கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார்.

முக்கியமாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கி வருகிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘Maaram Movies’ மற்றும் ‘Bharani Movie’ நிறுவனங்கள் சார்பில் இப்படத்தை குமார் டி.எஸ்.கே.ராமராஜ். டி.சுபாஷ், சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடுகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.