விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ ரிலீசில் புதிய திருப்பம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘பைரவா’,

விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’, ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ்லீ’, பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவிருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜி.வி.யின் ‘புரூஸ்லீ’ திரைப்படம் பொங்கல் ரிலீசிலிருந்து பின் வாங்கியது. ‘புரூஸ்லீ’ ஃபிப்ரவரி மாத ரிலீசாக வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி 13-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படமும் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின் வாங்கியுள்ளது.

இதனை இப்படக்குழுவினர் அதிகார்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு விஜய்யின் ‘பைரவா’, பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.