எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக 2 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றனர். அதை இந்திய ராணுவ வீரர்கள் உரிய நேரத்தில் பார்த்து விட்டனர். அவர்களின் எச்சரிக்கையை மீறி ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர்.

இருதரப்புக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களும், ஆயுதங்களும் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கிடப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.