ஜெயலலிதா வீட்டு வேலைக்காரியின் காருக்கு மரியாதையா? கதறும் தொண்டர்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு.

அ.தி.மு.க.,வை யார் வழிநடத்தி செல்வது என்ற பெரிய கேள்வி எழுந்தது.

அப்போது ஜெ.,விற்கு உதவியாக இருந்து வந்த சசிகலா காய் நகர்த்த துவங்கினார். அவர் திட்டப்படி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.

பதவியை தக்கவைக்க அமைச்சர்கள் நிர்வாகிகள் சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் அதை விரும்பவில்லை.

யாரிடம் கேட்டாலும் சசிகலாவை ஒரு போதும் நாங்கள் தலைவியாக ஏற்று கொள்ளமாட்டோம் என உறுதியாக கூறுகின்றனர்.

இந்நிலையில், சசிகலா அ.தி.மு.க.,அலுவலகம் வரும் போதும் பொதுநிகழ்ச்சிக்கு வரும் போதும், அ.தி.மு.க.,நிர்வாகிகள் மற்றும் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை வரிசையாக நின்று ஜெ.,விற்கு மரியாதை கொடுப்பது போல, சசிகலா காரை கும்பிடுகின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க.,உண்மை விசுவாசி ஒருவர் கூறுகையில்,‘‘ பல போராட்டங்கள் செய்து பொதுநலத்துடன் கட்சியை வளர்த்தவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா. அவர்களுக்கு கொடுத்த மரியாதையை ஜெ.,விடம் வேலைக்காரியாக இருந்த சசிகலாவிற்கு கொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வெட்கம் இல்லாமல் சசிகலா காலில் விழுவதும் அவர் செல்லும் காருக்கு கும்பிடு போடுவதும் சகித்து கொள்ள முடியவில்லை.

இவர்கள் எப்படியும் ஊர் பக்கம் வந்து தானே ஆகவேண்டும். அப்போது பார்த்துக் கொள்கிறோம் என ஆவேசமாக கூறினார்.