மாமியார் கொடுமை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்-மருமகள் கொடுமையை பார்த்திருக்கிறீர்களா?

மாமியார் கொடுமை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மருமகள் கொடுமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பெற்ற தாய்க்கு மகனால் ஏற்பட்ட கொடுமை என்ன தெரியுமா? இந்த சம்பவத்தை படியுங்கள் தெரியும்.

சீனாவை சேர்ந்தவர் யுவாங். இவர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்ற தாயை வீட்டிலேயே சிறையில் வைத்திருக்கிறார்.

யுவாங்கின் தாய்க்கு 92 வயதாகிறது. இவரின் மனைவிக்கு ஆரம்பித்தில் இருந்தே யுவாங்கின் தாயை பிடிக்கவில்லை என தெரிகிறது. வீட்டில் அடிக்கடி மாமியாரை கொடுமைப்படுத்தியிருக்கிறார் யுவாங்கின் மனைவி.

ஒரு கட்டத்தில் மனைவின் பேச்சுக்கு அடிமையான யுவாங், தன் தாயை வெறுக்க தொடங்கியிருக்கிறார். மேலும் தன்னை பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் வீட்டில் உள்ள ஒரு பாழடைந்த கூண்டு போன்ற அறையில் அடைத்து வைத்து உணவு மற்றும் உடையை போதிய அளவு கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர்.

படுக்கை வசதி ஏதும் இல்லாமல் அருவருப்பான அந்த இடத்தில் தங்குவதற்கு அந்த பெண் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். மேலும் குளிருக்கு எந்த துணியும் கொடுக்காமல் மரக்கட்டையின் மீது உறங்க சொல்லியுள்ளனர். அந்த கூண்டை எப்போதும் பூட்டியே வைத்து இருந்திக்கிறார்கள்.

சிறிய அளவிலான அந்த அறையில் பல ஆண்டுகளாக யுவாங்கின் தாய் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த தாய் உதவி கேட்டுள்ளார்.

அந்த வயது முதிர்ந்த தாயின் அவலநிலையை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள் அந்த தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். நல்ல உடைகளை கொடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

யுவாங் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வழக்கை தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.