பௌத்த பிக்குமாரால் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் பண்ணையாளர்களை பார்வையிட்ட வியாழேந்திரன்!

மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான மாதவன்னவில்

பௌத்த பிக்குமாரால் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் பண்ணையாளர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பொலன்நறுவை மாவட்டத்துடனான எல்லையிலுள்ள மட்டக்களப்பு மாதவன்னை கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த பிக்குமாரும் அவர்களுடன் வந்தவர்களும் மோசமாக தாக்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக பண்ணைத் தொழில் செய்துவரும் தமிழர்களின், கால்நடைகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் சுடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.