திருமதி.கணேசலிங்கம் மீனாம்பிகை 1ம் ஆண்டு நினைவஞ்சலி.!

                            1ம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி.கணேசலிங்கம் மீனாம்பிகை 1ம் ஆண்டு நினைவஞ்சலி
        தோற்றம் : 02.12.1940                                மறைவு :18.03.2016
அன்புள்ள எங்கள் அம்மாவே!!!

அன்பால் எம்மை காத்து நின்று

அறிவூட்டி எமை வளர்த்தாய்!

 

அரியதோர் பொக்கிஷத்தை

ஆண்டவன் பறித்தானே.?

ஆண்டு ஒன்று முடிந்தாலும்

ஆறாமல் தவிக்கின்றோம்!

 

ஆறுதலை இனி யார் தருவார்

அம்மா என்றழைக்க நீ இல்லையம்மா

என்றும் உன் நினைவுகள் சுமந்து

உன் வழியில் உன் பிள்ளைகள்

நாம் என்றும் பயணிப்போம்!

 

அன்பான எங்கள் அம்மாவே..!

உங்கள் நினைவுகளில் எம்

கண்கள் உடைந்து கண்ணீர்

இன்னும் பெருகுது அம்மா..!
கணேசலிங்கத்தின் மீனாம்பிகையே..!
எம் குலம் தழைக்க வந்த

திருநாம தீபமே நின்மதியாய்

உறங்கிடம்மா !!!

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கடந்த ஆண்டு 18.03.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவி அமரர் கணேசலிங்கம் மீனாம்பிகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை (துவசம்) எதிர்வரும் வியாழக்கிழமை (06.04.2017) முற்பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
திகதி: வியாழக்கிழமை (06.04.2017) முற்பகல் 11.00 மணி
 முகவரி :   141/5, மங்கையற்கரசி ஒழுங்கை, நல்லூர்.