திரு சற்குணானந்தன் மகாதேவன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!

                                    திரு சற்குணானந்தன் மகாதேவன்(கண்ணன்)
                            தோற்றம் : 1 பெப்ரவரி 1972          மறைவு :30 மே 2016
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணானந்தன் மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இல்லம் என்னும் கோயிலின் தெய்வமாய்
அன்பு என்னும் பள்ளியின் ஆசிரியனாய்
நேர்மை என்னும் பாதையின் சாரதியாய்
சேவை என்னும் வார்த்தையின் இலக்கணமாய்
நட்பு என்னும் தோட்டத்தின் விருட்சமாய்
அறிவுரைகள் பல கூறி எம்மை நல்வழி நடத்தி
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்து விட்ட
அன்பு தெய்வமே கண்ணா!

எத்தனை ஆண்டுகள் பல கடந்தாலும்
நாம் இப் பூமியில் வாழும் வரை உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாமல் வாட்டி வதைக்கும்மய்யா!
உன் மதிமுகமும் உன் கணீர் என்ற குரலும்
எம் இதயத்தை புரட்டிப் போடுதய்யா!
நீ இன்னும் மரணிக்கவில்லை
பேர்ண்ணில் தான் வசிக்கின்றாய் என்று
நாம் எம் இதயத்தை தேற்றுகின்றோம்!

உன் ஆத்மா சாந்தியடைய எமது கண்ணீரை
உனக்கு காணிக்கையாய்ச் சமர்ப்பித்து
இறைவனை வேண்டுகின்றோம்!!!

அன்று எம் மைந்தனின் இழப்புச் செய்தி கேட்டு உடனே வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், மேலும் பல உதவிகளை எமக்குச் செய்தவர்களுக்கும் வேறு பல நாடுகளில் இருந்து சிரமங்களை பாராது வந்து எங்கள் துயரத்தில் கலந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும் கடைசி வரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், கண்ணனின் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
தாய், தந்தை, சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
சற்குணாநந்தன்(தந்தை) — கனடா
தொலைபேசி: 001 416 321 69 79