இலங்கையில் கணனி அறிவு கடந்த ஆண்டு 7.3 வீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் உள்ளவர்களின் கணனி அறிவு , கடந்த ஆண்டு 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன . 2016 ம் ஆண்டு நாடு முழுவதிலும் 27.6% பேர் கணனி அறிவு கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. நகரப்பகுதியில் உள்ளவர்களில் 39.2% தொகையினர் கணனி அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் .

கிராமப்புறங்களிலும் , தோட்டப் பகுதிகளிலும் 2 6.1% கணனி அறிவும் , மேற்கு மாவட்டத்தில் 38.1% அறிவும் காணப்படுகின்றது . ஆண் , பெண் என்று பார்த்தால் , பெண்களை விட ஆண்களுக்கு அதிக கணனி அறிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . ஆண்கள் 29.5% , பெண்கள் 26.0% என்ற கணக்கில் பால்ரீதியாக கணனி அறிவு இருக்கின்றது . அதே சமயம் வயதைப் பார்க்கும்போது , 15 –19 வயதுக்கு இடைப்பட்டவர்களே , 62.5% கணனி அறிவுடன் , உச்சத்தில் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது