உலகளாவிய ரீதியில் மீண்டும் முடங்கிப் போன பேஸ்புக்!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பல நாடுகளில் தற்போது செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பேஸ்புக் பயனாளர்கள் கோளாறு குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் பேஸ்புக் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் வலைத்தளத்திற்குள் நுழைய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலும் பெருமளவு பயனாளர்களின் பேஸ்புக் பக்கம் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர்.

“பேஸ்புக் மீண்டும் விரைவில் வழமைக்குத் திரும்பும்” என ஒரு செய்தி மாத்திரமே பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளமும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வரையில் 2000 பேர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.