“அடியே பொண்டாட்டி” பாடல் வெளியீடு!

அறிமுக நாயகன் சஞ்சை கலை உலகில் முன்னேறத் துடிப்பதை நடிப்பில் நிரூபிக்க முயன்றிருக்கின்றார். நாயகனின் வெட்கம் கலைய அவர் பக்கம் பலரது பார்வைகள் திரும்பும் என்பது நிஜம். உடற்பயிற்கு செய்து உடலை முறுக்கேற்றுவதைப் பார்த்த போது கொலை விழப்போகின்றதோ என்று பதைத்துக் கொண்டிருந்தபோது, கதை அதைத் தாண்டி நகர்ந்தது சிறப்பு.

சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் சசிகரன் .யோ என்பதை அடுத்தடுத்து மெய்ப்பித்து வருகின்ற போதிலும், இந்த‌ப் பாடலின் காட்சிக் கோர்வையில் மின்னல் வேக நெருடல்கள் தோன்றி மறைந்ததை அவதானிக்க முடிந்தது.

ஒரு பாடலின் வெற்றிக்குக் கலைஞர்கள் பலரது உழைப்பு இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்கு கரம் கொடுப்பவர் தயாரிப்பாளர்தான். (PML MEDIA) அவருக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்ள வேண்டும்!

இயக்கம் – சசிகரன்.யோ

பாடல்வரி – சதீஸ்காந்த்

பாடல் இசை– முகமட் சமீல்

பாடியவர்கள் -முகமட் சமீல், பிரசாந்தினி

ஒளிப்பதிவு– பிரியந்தன்

ஒளித்தொகுப்பு – சசிகரன்.யோ

நடிகர்கள்– மிதுனா, சஞ்சய், அருள்ஆனந்த்,உதய்

திரைக்கதை– மிதுனா

தயாரிப்பு – pml media