கிரிக்கெட் அணியின் சனத்துக்கு பதிலாக யார்?

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரஹாம் லெபிரோய் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கு அரவிந்த டி சில்வாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பான இறுதி முடிவு இன்று (13) எடுக்கப்படும் என, இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லலித் கருபெரும மற்றும் மலிந்த வர்ணபுர ஆகியோரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.