காதலுடன் பேசுகிறேன்..!

இறைவா…..
நீயும் அவளைபோல்…..
கனவில் மட்டும்…..
வந்து போகிறாய்……!

என் கவிதைகள்…..
சிவப்பு நிறமாய்…..
இருக்க காரணம் நீ…..!

மறதியின் இடத்துக்கு…..
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை…..
மறுபடியும்நினைத்து விட்டேன்……..!

^^^

கடவுளும் காதலும்….
ஒன்றுதான் ……
இரண்டையும் உணரலாம்….
அடைய முடியாது……..!

என் இறப்புக்கு முன்…..
இறப்பிடத்தை…….
காதலால் காட்டுகிறாய்…….!

உன்னை நினைத்து……..
பூக்களை பார்க்கிறேன்…….
பூக்களே வாடி விழுகிறது….!

^^^

நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை….
உன் கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்…!

நீ
மறந்தே போனாலும்…..
மறக்க வைக்கவில்லை…..
உன் நினைவு பரிசுகள்….!

நீ
சேர்ந்தே போனாலும்….
சேதமாகவில்லை….
என் காதல்…….!

&

கவிப்புயல் இனியவன்