எழுந்திடு தமிழா..!

இரத்தம் கொதிக்கிறது
இந்த ராணுவத்தின் செயலைக் கண்டு
புத்தி எங்கும் புரட்சி வெடிக்கிறது
கத்தி கொண்டு அந்தக் கயவர்கள்
குடலைக் கிழித்துக் கழுகுக்கு இரையாக்குகின்றன
என் எண்ணங்கள் ஏங்குகிறது
சித்தம் எல்லாம் சிலிர்க்கலையா தமிழா?
இந்தச் சிங்களவன் செயலைக் கண்டு
வருந்தல் இல்லா வாழ்க்கை
நீ வாழ்வது தான் சரியோ
எதிரியை நீ எதிர்க்காது இருந்தால்
தமிழா எதிர் காலமே இல்லை உனக்கு
அச்சமோடா தமிழா உனக்கு
இனி அச்சப்பட ஏது உண்டு
உன்னிடம் வித்தகத் தலைவன் பிரபாகரன்
விழுந்தானோ மடிந்தானோ
அவ் விடை தேட வேண்டாம் நீ
விடுதலை ஒன்றே விடிவு
தமிழ் ஈழம் என்பதே முடிவு
தமிழனுக்கு வேண்டும் சுதந்திரம்
அது தனி நாடானாலே கிடைத்திடும்
என்பதை நீ அறிந்து எழுந்திடு தமிழா
இன்றே எழுந்திடு தமிழா
எம் ஈழத்தை நாமே மீட்போம்……