வவுனியா-சிவபுரம்”சிவசோதி விநாயகர் ஆலயம்”வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா!

ப.துசி
(வவுனியா )

வவுனியா நகரின் ஓர் அங்கமாம் சிவபுரத்தினிலே தன் அடிசேர்ந்தோர்க்கு குறைவில்லாது அருள்பாலித்து வருகின்ற சிவபுரம் சிவசோதி விநாயகப்பெருமானிற்கு நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆவணித்திங்கள் 25ம் நாள் 10.09.2017 உற்சவம்
“வேதாகம இளஞ்சுடர் ”
சிவஶ்ரீ குகரவிந்தக்குருக்களின்(j.p.w.i) தலமையில் ஆரம்பித்து பத்து நாள் உட்சபமாக இன்றுடன் ஏட்டவது நாளாக மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது நாளை மறுதினம் செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் சகஷ்ர (1008) சங்காபிஷேகம் இடம்பெற்று மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்று மாலை வசந்தமண்டப விஷேட பூஜையும் சிவசோதி விநாயகப்பெருமான் திருஊஞ்சலும் இடம்பெற்ற விழா இனிதே நிறைவடைகிறது .