ஒரு பாடலுக்கு இத்தனை பேரா?!

விக்ரம், தமன்னா முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் கோலிவுட் மூவி ஸ்கெட்ச். ஏற்கனவே போஸ்டர், டீசர் என விக்ரமின் லுக் அனைவரையும் கவர்ந்தது. திரைக்கதை, வசனம் என படத்தையும் இயக்குகிறார் விஜய் சந்தர்.

இதில் ஆர்.கே.சுரேஷ், மதுமிதா, வேல.ராமமூர்த்தி ஸ்ரீமன், மலையாள நடிகர் ஹரீஷ் என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் அச்சி புச்சி ஸ்கெட்சு என்ற பாடல் உள்ளது. இதில் விக்ரமுடன் 150 டான்சர்கள் நடனமாடுகிறார்களாம்.

1500 துணை நடிகர்களும் பங்கேற்றிருக்கிறார்களாம். இந்த பெரிய குழுவை தஸ்தாகீர் இயக்குகிறாராம். தமன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகலாம்.