விவேகம் படத்தை விட மெர்சல் படத்திற்கு அதிகமா?!

அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது.

இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் மெர்சல் பட டீஸர் வெளியாக இருக்கும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர்.