ஈழத்தமிழரின் இருப்பைக் காக்கவும், அடையாள அழிப்பைத் தவிர்க்கவும் த.தே.ம.முன்னணியுடன் இணையுங்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைமைகளின் நடவடிக்கைகளை நீஙகள் தற்காலத்தில் சிறப்பாக அவதானித்து வருவதுடன் அவை தொடர்பான ஆய்வுகளையும் செய்து துரோகத்தனங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றீர்கள்.

அண்மையில் 20வது திருத்திற்கு ஆதரவளித்த கிழக்கின் தலைமைகளின் கபட நாடகத்தையும் அதன் பின்புலமாக மறைகரமாக எது இயங்கியது என்பதையும் கூட நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள்.

இவற்றிற்கு எல்லாம் அடிப்படையாக இருப்பது எது?
—-
குறித்த கட்சியானது கொள்கையற்றிருப்பது தான் காரணம். கொள்கையற்றிருப்பதால் தெரிவானவர்கள் ஒவ்வொருவரும் தாம் நினைத்தபடி பயணிக்க முடிகின்றது.

2009ன் பிற்காலப்பகுதியில் கொள்கைகளைக் கைவிடத் தயாரான த.தே.கூட்டமைப்பில் இருந்து நாங்கள் ஏன் விலகினோம் என்ற நியாயத்தை இன்று நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

நாங்கள் -த.தே.ம.மு- ”எமது தேசமான ஒன்றிணைந்த வடக்குகிழக்கில், சுயநிரணய உரிமையுடன் கூடிய சமஷ்டி” யைப் பெறுவது என்ற கொள்கையைக் கொண்டு இயங்குபவர்கள்.

எனவே எங்களுடன் இணையுங்கள் என்று தமிழ்த் தேசத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரையும் இரு கரம் பற்றி அழைக்கின்றோம்.

மாவட்ட அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
0777 555 738