தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வுக்கான அழைப்பு-நியுசிலாந்து!

என் அன்புத் தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!! என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் விழி மூடி வீரச் சாவடைந்தான்.

திலீபன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த காலகட்டத்தில் நாமும் விழிப்பாக இருந்து, எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எமது கடமையைச் செய்வோமாக! அதுவே நாம் திலீபனுக்கு இந்த முப்பதாவது ஆண்டு நினைவின் போது செய்யக் கூடிய உண்மையான அஞ்சலியுமாகும்.

தமிழர்கள் வாழ்விற்காய், ஈழ தேசத்தின் விடிவிற்காய், நீருமின்றி உண்ணா நோன்பிருந்து மரணத்தை அணைத்துக்கொண்ட தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்திட 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அன்று பி.ப 6.30pm மணியளவில் (Tamil School Poonga) Murray Halberg Park, Range view road, Owairaka , Auckland மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவீரன் தியாக தீபம் லெப். கேணல் திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்திட வாரீர்.

-நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு-

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
.