கூட்டமைப்பு தமிழர்களின் அழிவிற்கு சிங்களவர்களின் பங்காளிகள்!

(தரனி)
கூட்டமைப்பின் கூத்துக்கள் சுயநலம் என்பதை 18.09.2017 அன்று நடைபெற்ற யாழ் அபிவிரித்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இருந்து மீண்டும் ஒருதடவை நிருபனமாகிறது! அதில் ஒன்று தியாகி தீபம் திலிபன் அவர்களின் நினைவுத் தூபிiயை பராமரிப்பதும், இரன்று மாவீரர் கல்லறைகளை புணரமைப்பு செய்வதும் என முடிவெடுக்கப்பட்டது! இதனுள்த்தான் இவர்களின் போலி முகத்திரை கிளிக்கப்படுகின்றது!
கடந்த காலங்களில் அதாவது 27.11.2016 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் போற்றி வணக்கப்பட்ட புனிதமான மாவீரர் நாள்! இதனை சிறிதரன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி தான் ஒரு தளபதிபோல் நின்று செயற்பட்டு மக்களால், புத்தியிவிகளால் நய்யாப்பு உடைக்கப்பட்டார்! இதனைத் தொடர்ந்து மக்கள், நலன்விரும்பிகள்,மாவீரர்களின் பெற்றோர்கள் என திரண்டு மீண்;டும் கல்லறைகளை கட்டுவதற்கு முயன்றபோது அங்கே அவர்கள் எதிர் பாராத விதமாக அரச சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளக்கப் பட்டு நீதிமன்றம்வரை சென்று நீதியின் பிரகாரம் அவர்களை விடுவித்து கல்லறைகள்; கட்டுவதற்கு அனுமதி;யும் வளங்கப்பட்டதனை நாம் அறிந்ததொன்று!
இதனை தாங்கள் நல்லவர்கள் எனும் நோக்கோடு யாழ் அபிவிரித்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கிறார்கள் மீண்டும் கல்லறைகளை புணரமைக்க! 2009 யுத்தம் முடிவுற்ரபின் இதுவரையிலும் வடக்கு இந்த கூட்டமைப்பின் பலம!; கூட்டமைப்பின் ஆளுமைக்குள் இருக்கும் ஒரு மாகாணம்! யுத்தம் முடிவுற்று இத்தனை வருடங்கள் முடிந்தும் ஏன்? இவர்களுக்கு 18.09.2017 அன்றுதான் தியாக தீபம் திலிபன் அவர்களின் நினைவுத்தூவி இருப்பது நினைவில் வந்ததா? இப்போதுதான் புணரமைக்க நேரம் வந்ததா? என்கின்ற கேள்விகள் அடிப்படை அறிவுகொண்ட ஒருவரால் கூட கேட்கமுடிகிறது என்றால் இந்த கூட்டமைப்பின் நகர்வு என்பது அப்பாவி தமிழர்கள் மீது கால்வைத்து சிங்களவர் சேலைக்குள் குளிர்காய்ந்து இருக்கின்ற மக்களை நடுத்தெருவில் இட்டுச்செல்லும் நிலைக்கு முன்னெடுப்பதனை மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதுதான் உன்மை!
மாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் விளக்கேற்றும்போது காவல்துறை பாதுகாப்பு வழங்கி நிகள்வை முன்னெடுக்க முடியும் என்றால்? ஆதனை சாதாரண மக்கள் முன்னெடுக்கும்போது ஏன்? அதே காவல் அதிகாரிகள் தடுக்கவேண்டும்? இதுதான் அரசியல் சூழ்ச்சி என்பதா?!
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு! இதற்குள் எத்தனை அமைப்புக்கள் இவர்களில் தமிழருக்கு எதிராக இந்தியாவால் உருவாக்கப்பட்டு பின் தமிழர்கள் மீது இனவெறித்தாக்குதல் செய்து அனைத்தும் அடக்கப்பட்ட பின் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு! தமிழர்களின் வாக்குரிமைகளை பெற்று நிவந்தனை அற்ற சுயனலப் பாதையில் செல்வது இவர்கள் தமிழ் மக்களின் பார்வையில் ஒரு கருணா? ஆல்லது கருணா செய்த வரலாற்று துரோகத்தை இவர்களும் செய்யப்போகிறார்களா? ஏன்பது புரியாத புதிராக பூளோக அரசியல் என்று புலம்பும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடையே ஒரு பலமிழர்ந்து செல்வதற்கு இவர்களின் சுயலாப அரசியல் திகள்கின்றது!
மக்களின் எதிர்பாற்பில் உருவான வடமாகாண சபை! பதவிச் சண்டை ஒருபுறம்! அதனுள் எழும் பிரச்சனை ஆயிரம் சம்பந்தன் தீpர்ப்பாரா? சுமந்திரன் தீர்ப்பாரா? முதல்வர் தீர்ப்பாரா? அதையும் தாண்டி ஆளுணர் தீர்ப்பாரா? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்ற போது! இவர்களின் பிரச்சனையை தீற்க பலர் தேவைப்படும் பச்சத்தில்! மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது யார்?! நாளுக்கு நாள் ஏதோ ஒரு போராட்டம்! ஏதோ ஒரு நில ஆக்கிரமைப்பு! கஸ்ரப்பட்டு படிப்பினை முடித்து வேலையற்ற போராட்டம்! இவைகள் எல்லாம் எமது தமிழழ் தலைமைளின் கீழ் உள்ள பிரதேசங்களில் மாத்திரம் தொடர் கதையாக நிகழ்கின்றது! ஐந்து அம்ச கோரிக்கை! முன்வைத்து அன்று வீரகாவியமான தியாக தீபம் திலிபன் அவர்களின் தியாகத்தைக் கூட கொச்சப்படுத்தி நிவந்தனை இல்லா அரசியல் செய்யும் சுயனலம் உள்ள கூட்டமைப்பில் கொள்கையில்லாமல் கோமாளி அரசியல் செய்யும் இவர்களின் பெய்முகம் மீண்டும் புலனாகிவிட்டது!