ஸ்கெட்ச் போடும் கிரிஷ்ணா வீரா படத்தின் கதை!

எல்ரெட் குமார் தயாரிப்பில் கிரிஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் படம் தான் வீரா. சில மாதங்களுக்கு முன்பே போஸ்ட்- ப்ரோடுக்ஷன் முடிந்து செப்டம்பரில் ரிலீசுக்காக காத்துகொண்டு இருக்கும் படம்.வீரா கிரைம் திரில்லர் வகையாராவை சேர்ந்தது. “எந்த ஒரு திருட்டு வேலையயை செய்யும் பொழுதும், நிதானமாக பிளான் செய்து, ஸ்கெட்ச் போட்டு களத்தில் குதிக்கும் டீம். அதில் ஒருவரான கிரிஷ்ணாவின் ஆசை அந்த டீமுக்கு தலைவனாக வேண்டும் என்பது தான். அதற்காக இவர் தனியாக போடும் ஸ்கெட்ச் தான் படத்தின் கதையாம்.”சினிமா பேட்டை கிசு கிசு: முதலில் பாபி சிம்ஹா, பால சரவணன் நடிப்பதாக இருந்த படமாம். அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பார் என்று கூறப்பட்டது, இறுதியில் நம்ப கிரிஷ்ணாவிற்கு அடித்தது யோகம்.