புதிய அரசியலமைப்புக்கான அறிக்கையை வரவேற்று உரையாற்றினார் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்று உரையாற்றியுள்ளார். அத்துடன், இவ்வறிக்கையானது புதிய மாற்றத்துக்கான ஏற்பாடு எனவும், புதி ய அரசியல் யாப்பு அனைத்து சமூகத்தையும் திருப்திப்படுத்தியுள்ளதாகவும் உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடசித் தலைவர் ரவூப் கக்கீம், குறித்த அறிக்கையில் தனது கருத்துக்கள் எவையும் உள்வாங்கப்படவில்லையெனக் கவலைவெளியிட்டுள்ளார். அத்துடன் அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியின் அடிப்படை அம்சத்திலிருந்து மாற்றமடையாது எனவும் அதற்கு சிறிலங்காசுதந்திரக் கட்சி ஒருபோதும்அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்து வருவதுபோல் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை மாறுபடாது அமையும் எனவும், வடக்குக் கிழக்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கையர்களும் சம உரிமையுடன் வாழும் நிலையை இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கும் எனவும்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உரையாற்றுகையில், ஒற்றையாட்சி தன்மை மாறுபடாத தன்மையில் புதிய அரசியலமைப்பு இருக்கவேண்டுமெனவும், அவ்வாறில்லாவிட்டால் அதனை கூட்டு எதிரணி எதிர்க்கும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்போ அல்லது சுயநிர்ணய உரிமை தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லையென்பதுடன் இது தொடர்பாக இரா.சம்பந்தன் எதனையும் வலியுறுத்தவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.