பாதங்களில் விளக்கேற்றும் விநோத கோயில் !
ஒசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில் மோரனப்பள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ளது தேவி பிரத்தியங்கிரா கோயில். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறார்.
ராஜகோபுரம்
ராஜகோபுரம் இந்த கோயிலின் ராஜகோபுரம் தமிழகத்தின் வேறெங்குமில்லாத புகழ் பெற்றதாகும். கோபுரத்திலேயே மிகப்பிரம்மாண்டமாக தேவியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வளவு பெரிய சிலை எந்த கோபுரத்திலும் வைக்கப்படமாட்டாது.
விசாலமான இடம்
விசாலமான இடம் பார்ப்பதற்கு சிறிய கோயில் போல தென்பட்டாலும், இது விசாலமாக பரந்துவிரிந்த இடத்தில்கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் சிங்க வாய் வழி உள்ளது.
 பூசைகள்
பூசைகள் இந்த கோயிலில் வித்தியாசமான நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது. மிளகாய் யாகம் நடத்தப்படும் தெய்வம் இந்த பிரத்தியங்கரா தேவி. கடும்கோபம் கொண்டு வீற்றிருக்கும் தெய்வம். தேவியின் பாதங்களில் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர்.
 எப்படி செல்லலாம்
எப்படி செல்லலாம் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஓசூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓசூரின் இரண்டாவது சிப்காட் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது இந்த பிரத்தியங்கரா தேவி ஆலயம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*