கோயில்களில் அரோஹரா என்று முழங்குவது ஏன்?
முருகன் கோயிலாகட்டும், சிவன் கோயிலாகட்டும் அரோகரா என்ற கோஷம் கேட்கும். இதை ஏன் சொல்கிறார்கள்?
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. திருவாரூரில் பிறக்க முக்தி; காசியில் இறக்க முக்தி; சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி; ஆனால், யாராகஇருந்தாலும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை. பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.இத்தலத்தில், அண்ணாமலைக்கு அரோகரா எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர். சிவனின் திருநாமங்களில் அரன் என்பதும் ஒன்று. இத்திருப்பெயரினை அரன், அரன் என அடுக்குத்தொடர்போல சான்னார்கள் ஒரு காலத்தில்! அது அர ஹர அர ஹர என்று மாறியது.பின்னர் அரோஹரா எனத் திரிந்தது. அர ஹர என்றால் சிவனே சிவனே என சிவபெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*