மங்காத்தாவில் அஜித் எழுதிய காட்சி !

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.ஒவ்வொரு நடிகருக்கும் 50-வது படம் 100-வது படம் என்பது மைல்கல். குறிப்பிட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்நவொரு நடிகர்களுக்கும் உண்டு.

ரஜினிக்கு ‘ஸ்ரீ ராகவேந்திரா’ கமல்ஹாசனுக்கு `ராஜபார்வை’, விஜயகாந்த்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ போன்ற படங்கள் அவர்களுக்கு 100-வது திரைப்படங்களாக மிகப்பெரிய வெற்றியை பெற்றன.அதுபோல அஜித்துக்கு 50-வது திரைப்படமான `மங்காத்தா’ மாபெரும் வெற்றியைத் தந்தது. அஜித் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படங்களில் `மங்காத்தா’வுக்கு தனி இடம் உண்டு.

தனது 50-வது திரைப்படம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என, நடிகர்களுக்கு பல கனவுகள் இருக்கும்.

பெரும்பாலும் அவை தேசப்பற்றுத் திரைப்படமாகவோ, மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் கமர்ஷியல் படங்களாகவோத்தான் இருக்கும். ஆனால்இவற்றிலிருந்து தனித்து மாறுபட்டிருந்ததே `மங்காத்தா’ படத்தின் சிறப்பு.பொதுவாக நடிகர்கள் 25, 50 போன்ற படங்களில் மிகவும் நல்லவனாக ரசிகர்களுக்கு தம்மிடம் பிடித்த விஷயத்தை முழுவதும் வைத்து நடிப்பார்கள். ஆனால் அஜித் தன்னுடைய 50வது படத்தில் பக்கா வில்லனாக கலக்கியிருப்பார்.

இந்த படத்தில் அஜித் நடிப்பதை தாண்டி சில விஷயங்களையும் செய்திருக்கிறார். படத்தில் பிரேம்ஜி இறந்துபோகும் காட்சியில் இதுபோன்ற காட்சியை வைப்போம், இந்த வசனம் வைப்போம் என அஜித்தே சில காட்சிகளை எழுதி யோசனைகளை கூறியுள்ளார்.

அது வெங்கட் பிரவிற்கு பிடித்துபோக அப்படியே கதையில் வைத்தார்களாம். இந்த தகவலை இப்பட எடிட்டர் பிரவின் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.