பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவாகியுள்ளதாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று மாலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டடைன் பகுதிக்கு 324 கிலோ மீற்றர் தொலைவில் சுமார் 89 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் நிலைகொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.