கல்­முனை நகர சபையை உள்­ளூ­ராட்சி சபை­க­ளாக பிரிக்க ஏற்ப்பாடு!

கல்­முனை மாந­கர சபையை 4 உள்­ளூ­ராட்சி சபை­க­ளாக ப்பிரிப்­ப­தற்கு இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாணத் தமிழ் மற்­றும் முஸ்­லிம் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் மற்­றும் மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்­சர் பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ருக்கு இடை­யில் நேற்­று­முன்­தி­னம் பேச்சு நடை­பெற்­றது.

அதில் 4 உள்­ளூ­ராட்சி சபை­களை அமைப்­பது தொடர்­பாக யோச­னை­கள் முன் வைக்­கப்­பட்டு இணக்­கம் காணப்­பட்­டது. அதற்­காக எதிர்க்­கட்­சித் தலை­வர் ஆர். சம்­பந்­தன் தலை­மை­யில் குழு­வொன்­றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான பிர­தே­ச­சபை வேண்­டும் என்று வலி­யு­றுத்தி கடந்த தினங்­க­ளில் போராட்­டங்­க­ளும் இடம்­பெற்­றி­ருந்­தன. அதற்கு சிலர் எதி­ரப்­பும் தெரி­வித்­தி­ருந்­த­னர்.