வீரம் விளைந்த மண்..! மட்டுமல்ல எங்கள் மண்..!பாசம் விளைந்த மண்ணும் கூட!

(சான் சாம்)

வீரம் விளைந்த மண்.. மட்டுமல்ல
எங்கள் மண்..
பாசம் விளைந்த
மண்ணும் கூட!

காகம் தன் குஞ்சுக்கு
சொண்டுக்குள் உணவைக்
கொண்டுவந்து கொடுக்கும்..

சிறகு முளைத்த குஞ்சுகள்
இரை தேடிப் பறக்கும் வயதில் கூட..
உறவுகளை அறுத்து விடாத
தாய்க் காகம்…
உணவைத் தன் சொண்டினால் கொடுக்கும்..!
காகம் மட்டுமா..இல்லை..எங்கள் தமிழ்த்
தாய்களும் தான் !

காட்டுக்குள் தன் மகன் போராடும்போது..
தமிழ் ஈழத் தாய் ஒருவர்
உணவைக் கொண்டுவந்து
பரிமாறும் போது..
பாசத்தையும்..சேர்த்துப்
பரிமாறுகிறார் பாருங்கள் ..!

வீரம் விளைந்த மண்.. மட்டுமல்ல
எங்கள் மண்..
பாசம் விளைந்த
மண்ணும் கூட!