சிறுவர் தொழிலாளரின் அளவு குறைந்துள்ளது!

சிறு­வர் தொழி­லா­ளர்­கள் தொடர்­பில் 2008ஆம், 2009ஆம் ஆண்­டு­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு சிறு­வர் தொழி­லா­ளர்­க­ளின் தொகை கணி­ச­மா­கக் குறை­வ­டைந்­துள்­ளது எனத் தொழில் மற்­றும் தொழிற் சங்­கங்கள் உற­வு­கள் அமைச்­சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­தார்.

ஆர்­ஜென்­டீ­னா­வில் நடை­பெற்ற ‘சிறு­வர்­களைத் தொழில்­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வதைத் தடை­செய்­தல்’ தொடர்­பான 4ஆவது மாநாட்­டில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கல்வி கற்­கும் குறைந்­த­ பட்ச வய­தெல்­லை­யா­னது 14 வய­தி­லி­ருந்து 16 வரை­யில் உயர்த்­தப்­படவேண்­டும் என்று சில தினங்­க­ளுக்கு முன்­பாக இலங்கை அரசு தீர்­மா­னித்­தது.

அதே­போல வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கான குறைந்­த­பட்ச வய­தெல்­லை­யும் 16 ஆக உயர்த்­தப்­பட்­டது.

குழந்­தை­க­ளைக் கட்­டா­யப் ப­டுத்தி வேலை­க­ளுக்கு அமர்த்­தல், குழந்­தை­க­ளைக் கடத்­தல், குழந்­தை­கள் மீதான பாலி­யல் சுரண்­டல் தடுப்பு மற்­றும் சட்­ட­ வி­ரோதச் செயல்­க­ளில் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடை­செய்­தல் ஆகி­யவை நாட்­டின் குற்­ற­வி­யல் சட்­டத்­தில் ஏற்­க­னவே உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­புக்­கு­ரி­யது.

எவ்­வா­றா­யி­னும், இன்று பாது­ காப்­பற்ற நிலை­யில் வாழ்ந்து வந்த சிறு­வர்­க­ளுக்­குப் பாது­காப்­பான வாழ்க்கைச் சூழல் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது  என்­றார்.