உணர்வுகளும் உயிர் பெறும்..!
(தமிழ் மதி)

விண்ணகம் போற்றிடும்
மண்ணுலக மாவேந்தர்களை
நினைவினிலே நிறுத்திடும்
நிமிடமதில்
உணர்வுகளும் உயிர் பெறும்!

காலத்தின் வஞ்சனையால்
காலனவன் உமை அணுகிட
கல்லறையில் கண் உறங்கும்
காவிய நாயகர்களே!
கண்மணிகளே !

நினைவுகளில் தம் நினைவலைகள்
நிழலாடிடும் நேரத்திலே
இருதயமும் ஒருமுறை
இயல்புக்கு மாறாய்
இயங்கிட மறுக்கும்!

கணத்திட்ட ரணங்கள்
மனங்களில் நிலைகொள்ள
இருதயமும் உமை எண்ணி
இரத்தக்கண்ணீர் வடிக்கும்!

தாயக விடிவிற்காய்
தம் உயிரை தந்தீர்கள்!
தணியாத தாகத்தோடு
கல்லறைகளில்
தனல்களாய் நிலைகொண்டீர்!

கொழுந்து விட்டெரிந்து
கொடியவர்களை
கொன்றொழித்து
விடிந்திடும் பொழுதது
மாவீரர் கனவுகளை
நிஜமாக்கும் நாளை !
இது நிச்சயிக்கப்பட்ட
உண்மை!!!!

தாகத்தோடு கல்லறையில்
துயில் கொள்ளும்
உதிர உறவுகளே
உமை நினைக்கையிலே
உணர்வுகளும் உயிர் பெறும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*