ஈழத்து கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு – மர்மக்குழல்!

ஈழத்து கலைஞர்களின் படைப்புகளை முற்று முழுதாகக் கொண்டு அபயன் கணேஷ் இயக்கத்தில் ஈழத்து மண்வாசனையுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படைக்கப்பட்டதே மர்மக்குழல் நெடுந்தொடர்.

ஈழத்து தமிழர்களின் கலாசாரமும் பண்பாடும் புலம்பெயர் வாழ் மக்களின் வலிகளினையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மர்மக்குழல் உருவாக்கப்பட்டுள்ளது.

1960களில் இருந்து இலங்கையில் சில நெடுந்தொடர்களோ குறும்படங்களோ படைக்கப்பட்ட போதிலும் அதில் ஈழத்து கலைஞர்கள் பணியாற்றியது அரிதாகவே இருந்தது. இன்று ஈழ மண்ணின் கலைஞர்களினை அடையாளப்படுத்தி அவர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் மர்மக்குழல் நெடுந்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

மர்மக்குழல் தொடரில் பணியாற்றும் கலைஞர்கள் தொழில்முறையைக் கற்றுக்கொண்டு இத் துறைக்குள் வரவில்லை அப்படி இருந்தும் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கிக் கொண்டு இக் கதையை குறுகிய வளங்களுடன் ஈழத்து தத்துவங்களை சார்ந்த வண்ணம் செல்கின்ற இவ் இளங்கலைஞர்களின் படைப்பு பராட்டப்பட வேண்டியதே.

இத்தொடரின் கதை நகர்வானது பல மர்மமான முடிச்சுக்களுடனும் ஈழத் தமிழனின் வாழ்வியலைக் காட்டும் பாணியிலும் நகர்ந்து செல்கின்றது. இதில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

மர்மக்குழலின் தலைப்பு பாடலிலும் அதில் இடம்பெறும் காட்சிகளிலும் ஈழத்தமிழ் பண்பாட்டினையும் ஈழத்து மண்வாசனையையும் உணர்வுபூர்வமாக வெளிக்காட்டியுள்ளனர்.

ஈழத்தின் எதிர்கால பெரும் படைப்புகளுக்கு ஈழத்து கலைஞர்களின் மர்மக்குழல் ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அது மட்டுமன்றி தமிழனின் பண்பாடு மருவி வரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான ஒரு படைப்பு எதிர்கால சந்ததியினருக்கு சிதைவுறாத தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கையளிக்கும் வகையில் மர்மக்குழல் ஈழத்தின் தனித்துவமாய் விளங்குகிறது.

ஈழத்து மர்மக்குழலின் கலைஞர்கள்

நடிகர்கள் – நரேஷ், பிரியா, சைந்தவி, கமலராணி, இதயராஜ்நித்யா, கிரிஷா, டான்சிகா, லாறா, மகாலிங்கம், பாஸ்கரன்..

எழுத்து, இயக்கம் – அபயன் கணேஷ்

இணை இயக்குனர்கள்- சுலக்சன், மதுஷா மாதங்கி, குமரசிவம், மகிந்தன்

ஓளிப்பதிவு – மயூரன், வற்சு

இசை-சிவா பத்மயன்

படத்தொகுப்பு – ஆதன், டிறோசன், ருத்ரா

பின்னணிக்குரல் – தினேஷ் ஏகாம்பரம், மதுஷா, யசோதா, நிஷா, சுலக்ஷன், மகிந்தன், விஜயதர்சினி
ஒலிப்பதிவு – வாகீசன்

பாடல்-தீபன் கணேஷ்

பாடியவர்கள் – தீபன் கணேஷ், சம்ரக்ஷனா

நடனம் – சுபாசினி

ஆலோசனை – பகீரதி கணேசதுரை

மேற்பார்வை – கிருபா ஆறுமுகம்