பிணை முறி விநியோக சாட்சி விசாரணைகள் நிறைவு!

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றுடன்(20) நிறைவு பெற்றுள்ளது.

இது வரை காலமும் ஆணைக்குழுவில் ஆஜராகிய சாட்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக ஆனைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆணைக்குழுவில் இன்று  ஆஜராகிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க  சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் முறிகள் விநியோகங்களின்போது தெளிவான சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

மேலும் முறிகள் விநியோகம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் இடம்பெற்றதாகவே தாம் கருதுவதாக  பிரதமர் குறிப்பிட்டார்.